ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் உறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஊர்வசி அமிர்தராஜ், தொகுதிக்கு உட்பட்ட கருங்குளம் வட்டாரப்பகுதியில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். வல்லகுளம், உடையநேரி, மணல்விளை, அரியநாயகிபுரம், திருவரங்கப்பட்டி, கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் தாலுகா மருத்துவமனைகளை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊர்வசி அமிர்தராஜ் உறுதி அளித்தார்.







