நாடு முழுவதும் 14 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல், நாடு முழுவதும்…

இந்தியாவில் இதுவரை 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், அடுத்தப்படியாக 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

3வது கட்டமாக நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனக்கூறியுள்ள மத்திய சுகாதாரத்துறை, மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுவரை 14 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 99 நாட்களில் 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள இந்தியா, உலகளவில் வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.