மனித உரிமைகள் தொடர்பான 8-வது மராத்திய குறும்பட விழாவில் தமிழில் வெளியான “அச்சம் தவிர்” குறும்படத்திற்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் 8-வது மராத்திய குறும்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது, சினிமாவில் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 123 குறும்படங்கள் விருதுக்காக போட்டியிட்டன. இதில் தமிழில் வெளியான “அச்சம் தவிர்” குறும்படம் 3-ம் இடத்தை பிடித்தது.
மராத்தி மொழியில் வெளியான வெளியான நிலேஷ் அம்பேத்கர் இயக்கிய ‘சிர்போக்’ படத்திற்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், அசாமி மொழியில் வெளியான பவானி டோலி தாஹூவின் ‘என்ஃபில்டு’ படத்திற்க்கு இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும், தமிழில் டி.குமார் இயக்கிய ’அச்சம் தவிர்’ குறும்படத்திற்கு 3-வது பரிசாக ரூ. 1 லட்சமும் பெற்றன.
அச்சம் தவிர் குறும்படம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர்களின் கண்ணியம் மற்றும் கல்விக்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இக்குறும்படம் வலியுறுத்துகிறது.







