சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரயில்வே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் விழுந்ததில் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இச்சாலையின் குறுக்கே அமைந்துள்ள சேலம்-விருத்தாச்சலம் ரயில்வே பாதையை மேம்பாலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்காக தற்போது அங்கு 20 அடியில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இவ்வழியாக நேற்று அதிகாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலை சரிசமமாக இருப்பதாக நினைத்து சென்றதில் எதிர்பாராதவிதமாக அப்பள்ளத்தில் விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை காலையில் அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசாரின் இளைஞரின் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியான நபர் திருச்செங்கோட்டை சேர்ந்த லோகேஷ்(26) என்பது தெரியவந்தது. லோகேஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.தொடர் விடுமுறை சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப சென்னைக்கு சென்ற இடத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
உயிரிழந்த லோகேஷ்க்கு மதுமிதா என்ற மனைவியும்,தர்ஷன் என்ற மகனும் உள்ளார்.மேம்பால பணிக்கான அறிவிப்புகள் இல்லாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே மேலும் இதுபோன்ற துர்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க மேம்பால பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் போதிய அறிவிப்புகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.—–வேந்தன்







