முக்கியச் செய்திகள் தமிழகம்

விபத்துகளைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் – மநீம

மூளைச்சாவின் பின்பு உடல் உறுப்பு தானம் தந்தவர்களை மக்கள் நீதி மய்யம் வணங்குகிறது என அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது தொடர்பாக மநீம வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சக்தி குமாரின் உடல் உறுப்புகள் 5 பேருக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டுள்ளன’ எனவும்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

’இளம் வயதில் பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தின் மத்தியிலும் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வந்த பெற்றோர்களின் கருணையும், ஈகையும், அந்த திடமனதும் போற்றுதலுக்குரியவை. மற்றவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த தியாகத் திருவுள்ளங்களை மக்கள் நீதி மய்யம் வணங்குகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘மனைவியைக் கொலை செய்து நாடகமாடிய கணவன்’

மேலும், ‘இரு சக்கர வாகனத்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள் விபத்தில் தங்கள் இன்னுயிரை இழப்பது தமிழகத்தின் அன்றாட நிகழ்வாகி விட்டது. வாகனம் ஓட்டும் மாணவர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றினாலே பாதி விபத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது’ எனவும், ’மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து விபத்துகளைக் கட்டுப்படுத்துவது குறித்த செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்’ என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தடைபட்ட எஸ்எஸ்ஐ மகளின் நிச்சயதார்த்தம் – வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு

Web Editor

ஆப்கன் கலவரத்திற்கு மத்தியில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்

Halley Karthik

தமிழ்நாட்டில் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம்

EZHILARASAN D