கோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸார் விசாரணை

கோவை மாவட்டத்தில் ஆட்சியரின் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம்…

கோவை மாவட்டத்தில் ஆட்சியரின் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம் அனுப்பும்படி கேட்கப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டதன் போரில் போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,  போலி வாட்ஸ் ஆப் கணக்குகளில் இருந்து தனது பெயரைப் பயன்படுத்தி பணம் பறிக்க முயல்கின்றனர். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோரின் பெயரில் இந்த கும்பல் பண மோசடியில் ஈடுபட முயன்றது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.