’சிறார்களுக்கான 2ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்’

15-18 வயதுடைய சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை குறித்து மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். 15-18 வயதுடைய சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதை…

15-18 வயதுடைய சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை குறித்து மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

15-18 வயதுடைய சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில் அவர் குறிப்பிட்டிருந்தது,

166.8 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாடுமுழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், உலக அளவில் தடுப்பூசி செலுத்திகொள்வதில் முதலிடத்தில் இந்தியா உள்தாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 15-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த மாதம் ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனவும், தற்போது வரை நாடு முழுவதும் தகுதி உடைய 15-18 வயதுடைய சிறார்களுக்கு 4.66 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளேயே முதல் தவணை தடுப்பூசி 63% செலுத்தப்பட்டுள்ளது சாதனைக்குரிய விஷயம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல் தவணை போல் இரண்டாம் தவணை தடுப்பூசி சிறார்களுக்கு செலுத்துவது முக்கியம் என அதில் வலியுறுத்தியிருந்தார்.

இதனால் மாவட்ட அளவில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இதற்கு தகுதியுள்ள சிறார்களை கண்காணித்து தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் எனவும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.