கேரள மாநிலம் மூணாறுக்குச் சுற்றுலா சென்ற திருப்பூரைச் சேர்ந்த அப்துல்லா
என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் டூம்லைட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (வயது26). இவர்
சென்னை பல்லாவரத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து
வந்தார். கடந்த வியாழக்கிழமை அன்று 11 பேர் கொண்ட குழுவினருடன்
அவர் மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அவர்கள் சொந்த ஊர் திரும்ப இருந்த நிலையில் அன்று மதியம் 2 மணி அளவில் மூணாறு அருகே உள்ள எல்லக்கல் ஆற்றுபகுதியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதியில் அப்துல்லா குளித்துக் கொண்டிருக்கும் போது ஆற்றில் மூழ்கிப் பலியானார். அப்துல்லா நீரில் மூழ்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அப்பகுதி மக்களுக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அடிமாலி தீயணைப்புத்துறையினரும் இணைந்து அப்துல்லாவின் சடலத்தை மீட்டனர். மதுபோதையில் குளிக்க சென்றதே விபத்துக்குக் காரணம் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







