சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் – எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்!

தென்காசி மாவட்டம்  சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தொடங்கி வைத்தார்.  தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு பல்லாயிரக்கான ஏக்கரில்…

தென்காசி மாவட்டம்  சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தொடங்கி வைத்தார். 


தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு பல்லாயிரக்கான ஏக்கரில் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுரண்டை, வீராணம், சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
என கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி
நாடார், ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று சுரண்டையில் இருந்து வாடியூர் செல்லும் சாலையில் நெல்
கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்தக் கொள் முதல் நிலையத்தில்,
விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வானது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சுரண்டை நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இக்கொள்முதல் நிலையத்தில் சுரண்டை, வீகேபுதூர், ஆனைகுளம்,
ஊத்துமலை, சேர்ந்தமரம்,  சாம்பவர் வடகரை, கீழக்கலங்கல் மற்றும் சுற்று வட்டார
பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து தினமும் 800 மூட்டை நெல் கொள்முதல்
செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.