குடியிருப்பு பகுதிக்குள் இறந்த புள்ளிமான் – வனத்துறையினர் விசாரணை!

காஞ்சிபுரம் மாவட்டம் வஞ்சிவாஞ்சேரி குடியிருப்புப் பகுதியில் புள்ளிமான் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வஞ்சிவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் புள்ளிமான்…

காஞ்சிபுரம் மாவட்டம் வஞ்சிவாஞ்சேரி குடியிருப்புப் பகுதியில் புள்ளிமான் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வஞ்சிவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புள்ளிமானின் உடலை ஆய்வு செய்தனர்,அதனை தொடர்ந்து இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் சரக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புள்ளி மானின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதணை செய்து காட்டுப்பகுதியில் மானின் உடலை தகனம் செய்தனர்.

பருவமழை பொய்துள்ள காரணத்தினால் இரை மற்றும் குடிநீரை தேடி வரும் விலங்குகள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உயிரிழந்ததாக கூறும் இப்பகுதி மக்கள் இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.