எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மக்களவையில் இன்று பிரதமர் மோடி பதில் அளித்து உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தன. மேலும் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன் மீது கடந்த 2 நாட்களாக காரசார விவாதம் நடைபெற்றது.
இந்தநிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மக்களவையில் இன்று பதில் அளிப்பார் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் இன்று பதிலடி கொடுப்பார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியாவை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கு காந்தியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரும் பங்காற்றியது என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1689118392106786817?s=20
இன்றும் இந்தியா, ஊழலே வெளியேறு, குடும்ப அரசியலே வெளியேறு, வாங்கி வங்கி அரசியலே வெளியேறு என ஒரே குரலாய் ஒலிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.







