அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் : இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் உறுதி!

ஜப்பான் அணியுடன் லீக் போட்டியில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து, அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி…

ஜப்பான் அணியுடன் லீக் போட்டியில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து, அரையிறுதி
போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கத்தில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில்  பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டம் முழுவதும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஹேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

நீண்ட இடைவெளிக்கு சென்னையில் விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
ஜப்பான் அணியுடனான அரையிறுதி போட்டி முக்கியமானது. ஜப்பான் அணியுடன் லீக் போட்டியில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். சென்னையில் ஹாக்கிக்கு ரசிகர்கள் அதிக ஆதரவை தருவார்கள். போட்டியில் வீரர்கள் செய்யும் தவறுகளை கூட சரியாக சுட்டிக்காட்டுவார்கள்.

தமிழ்நாடு வீரர் கார்த்திக் தனது முதல் தொடரில் எவ்வித பதற்றமும் இல்லாமல்
சிறப்பாக விளையாடி வருகிறார். இதேபோல் விளையாடினால் சிறந்த வீரராக
உருவெடுப்பார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பயன்படுத்தவுள்ள செயற்கையிழை ஆடுகளத்தை அமைத்த தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள். எழும்பூர் மேயர்
ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் அதிக போட்டிகள் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

ஒலிம்பிற்கு முன்னதாக இங்கு போட்டிகள் நடத்துவது குறித்து இந்திய ஹாக்கி
சம்மேளனம்தான் முடிவு செய்யும். அஷ்வின் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி
வருகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அவரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது
என ஶ்ரீஜேஷ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.