முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை : வருமான வரித்துறையினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை  நடைபெற்று வரும் நிலையில், வருமான வரித்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. 

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

senthil balajiகரூர், திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சரின் நண்பர்கள், சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களிலும் சோதனையும் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடைபெறுவதால் திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் அமைச்சரின் வீட்டருகே குவிந்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் பெண் அதிகாரி ஒருவர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவருடன் திமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரபட்டியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் வருமானத் துறையினர் முற்றுகையிட்டதால பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இன்று 75வது சுதந்திர தினம்; டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்

G SaravanaKumar

பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

Web Editor

பீகாரில் 5 ரயில் பெட்டிகள் இன்ஜினில் இருந்து கழன்று விபத்து

Web Editor