முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம்

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் சேவைகளை பெற புதிய ஏற்பாடு

ஆதார் அட்டையில், தேவைப்படும் அனைத்து மாற்றங்களையும் செல்போன் குறுஞ்செய்தி மூலம் நாம் செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ எனப்படும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் இயங்குகிறது. இந்த ஆணையம் மத்திய அரசு வழங்கும் நிதி, மானியப் பயன்கள், ஆதார் எண் ஒதுக்கீடு உள்ளிட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆதாரின் இணையதளம் மற்றும் அதன் செயலியைப் பயன்படுத்த, இணைய வசதி கட்டாயம் தேவைப்படும். ஆனால் இனிமேல், ஆதார் அட்டையில் நமக்கு தேவையான மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாக செய்துகொள்ள, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை பெற,  GVID (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை திரும்ப பெற RVID (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

இதுபோல், ஆதார் ஓடிபி எண்ணை பெற GETOTP (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்ணை சேர்த்து 1947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். ஒருவேளை ஆதார் அட்டை காணாமல் போனால், அந்த எண்ணை முற்றிலும் முடக்க, இரண்டு வழிமுறைகள் உள்ளன்.

1947 என்ற எண்ணுக்கு GETOTP (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்ணை சேர்த்து மெசேஜ் அனுப்ப வேண்டும். இரண்டாவது கட்டமாக LOCK UID (SPACE) என டைப் செய்துவிட்டு, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, வரும் ஒடிபியை சேர்த்து, 1947 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், ஆதார் எண் முடக்கப்படும். இந்த புதிய வசதி இணையத் தொடர்பு இல்லாத மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போலி சான்றிதழ் வழங்கிய ஊழியர்களுக்கு மதுரை மீனாட்சி கோயில் நோட்டீஸ்

Gayathri Venkatesan

ரயில்வே தேர்வில் முறைகேடு: 108 பேர் மீது வழக்குப் பதிவு – தேர்வாணையம் விளக்கம்

Web Editor

கனமழை பாதிப்பு; மழைநீருடன் கழிவுநீர் கலந்திருக்கும் அவலம்

Halley Karthik