மின் இணைப்புடன் இன்று மாலைக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட…

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் இன்று காலை 11.00 வரை 2.66 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது 99.57% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்.

 


இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.