நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் ஆதார் மையம் கடந்த 2 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் பள்ளி , கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவர்கள் புதிதாக ஆதார் பதிவு செய்ய மற்றும் திருத்தம் செய்ய முடியாமல் 50-ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன் எதிரொலியாக நிலக்கோட்டை தபால் நிலையத்தில் மக்கள் ஆதார் எடுக்க குவிந்து வருகின்றனர்.
ஆனால் நாள் ஒன்றுக்கு 30 – நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு புதிய ஆதார் மற்றும் திருத்தம் செய்யப்படுவதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் என மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து வட்டாட்சியரிடம் கேட்ட போது ” அரசு கேபிள் டிவி வட்டாட்சியருக்கு பாிந்துரைத்துள்ளதாகவும் , உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களாகவே பூட்டிக் கிடப்பதால் வருவாய்த்துறை இது குறித்து கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் , அலட்சியம் காட்டாமல் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
——-ரூபி.காமராஜ்