கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 7 நாட்களுக்கு பிறகு நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு…

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 7 நாட்களுக்கு பிறகு நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை, கொடைக்கானல், வட்ட கானல், வெள்ளகிரி போன்ற பகுதிகளில் பெய்த மழையால் நீர் ஓடைகள் வழியாக கும்பக்கரை அருவியை வந்தடைந்தது. இந்நிலையில் கடந்த ஏழு நாட்களாக பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அருவியில் தண்ணீரின் அளவு சீரானதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தேவதானப்பட்டி வனச்சரகர் அனுமதி அளித்துள்ளார். தொடர்ந்து பெய்த கனமழையால் கும்பக்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றம் அடைந்து சென்ற நிலையியல் தற்போது ஏழு நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளித்தது பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

——–அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.