இந்தியாவையே உலுக்கிய திஹார் சிறைச்சாலை சம்பவத்தில் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ’தில்லு தாஜ்பூரியாவை’ கொல்ல கொலையாளிகள் திட்டமிட்டது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…
டெல்லி ரோகினி நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல கேங்க்ஸ்டர் தில்லு தாஜ்பூரியா, திஹாரின் மண்டோலி சிறையில் கொல்லப்பட்டார். தில்லு தாஜ்பூரியா தேசிய தலைநகரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொலையாளிகள், பாதுகாப்பு குறைபாடுகள் மூலம், தில்லு தாஜ்பூரியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க எப்படி சதி செய்தார்கள் என்பது குறித்த முழு விவரத்தையும் தற்போது பார்ப்போம்.
மே 2 அன்று திகார் சிறையின் உயர் பாதுகாப்பு வார்டில் தில்லு தாஜ்பூரியா கொல்லப்பட்டார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் தரை தளத்தில் உள்ள அறைக்கு மாற்றப்பட்டார். அதேசமயம் தில்லுவை கொலை செய்த ஜிதேந்திர கோகி மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோரின் உதவியாளர்கள் சிறைச்சாலையின் முதல் தளத்தில் அடைக்கப்பட்டனர்.
கோகி கும்பல் தில்லுவைக் கொல்ல நீண்ட நாட்களாக முயன்று வந்தது. சிறையில் அவன் இருக்கும் இடத்தைப் பற்றி அறிந்தவுடன். அவர்கள் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டம் தீட்டியுள்ளனர்.
உயர் பாதுகாப்பு வார்டில் தரை தளத்திற்கும் முதல் தளத்திற்கும் இடையே இரும்பு வலை போடப்பட்டுள்ளதால், மற்ற தளத்திற்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இருப்பினும், போட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள் இரும்பு வலையை அறுத்துக்கொண்டு தரை தளத்தில் இறங்கினர். அவர்கள் மெதுவாக வலையை வெட்டி தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தச் சரியான தருணத்திற்காகக் காத்திருந்தனர்.
ஆதாரங்களின்படி, கொலையாளிகள் முதல் தளத்தில் உள்ள செல்களில் இருந்து வெளியேற்றும் மின்விசிறியின் இரும்புப் பகுதியைப் பயன்படுத்தி அதை கூர்மையான கத்திகளாக மாற்றினர்.
ஒருவேலை அவர்கள் தாக்கப்பட்டாலாம் என்பதற்காக முன்கூட்டியே வலி நிவாரணிகளை உட்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில், மே 1 ஆம் தேதி காலை தில்லுவைத் தாக்குவது என்று திட்டம் இருந்தது, ஆனால் அவர்கள் சிறையில் பாதுகாப்புப் பணியாளர்கள் சுற்றித் திரிவதைப் பார்த்ததும் தங்கள் திட்டத்தை மாற்றினர்.
https://twitter.com/RiteshLakhi/status/1654291879620661248?s=20
பின் மே 1 இரவு முழுவதும் விழித்திருந்து, மறுநாள் தில்லு தாஜ்பூரியாவைக் கொல்வதற்காகக் காத்திருந்தார். மே 2ம் தேதி காலை 6 மணியளவில் போட்டி கும்பலை சேர்ந்தவர்கள் இரும்பு வலையை உடைத்து ஒருவர் பின் ஒருவராகக் கீழே குதித்தனர். பின்னர் அவர்கள் தில்லுவை தாக்கினர். இது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.
இந்த சம்பவம் சிறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுபோன்ற ஒரு திட்டமிட்ட தாக்குதலை குற்றவாளிகள் எவ்வாறு நடத்தினார்கள் என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.







