மஹிந்திரா குழும நிர்வாக இயக்குநர் அனிஷ் ஷாவின்  சம்பளம் 83 % உயர்வு 

மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனிஷ் ஷா-வின் மாத ஊதியம் சுமார் 83 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான…

மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனிஷ் ஷா-வின் மாத ஊதியம் சுமார் 83 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனிஷ் ஷா, 2014 ஆம் ஆண்டில் குழுமத் தலைவராக  நிறுவனத்தில் சேர்ந்தார், அவர் 2019 இல் துணை நிர்வாக இயக்குநராகவும், குழுவின் CFO ஆகவும் நியமிக்கப்பட்டார். 2021 இல் டாக்டர் பவன் கோயங்கா ஓய்வு பெற்ற பிறகு, அவர் மஹிந்திரா குழுமத்தின் MD மற்றும் CEO பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அனைத்து மஹிந்திரா குழும வணிகங்களையும் அவர் மேற்பார்வையிடுகிறார். இந்நிலையில் அவரின் மாத ஊதியம் 83 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 2023 முதல் அனிஷ் ஷாவின்  மாத அடிப்படை சம்பளம் ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.55 லட்சமாக உயர்கிறது. . இந்த ஊதியம் அவரது செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு  2023 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரை இருக்கும்.
அதேபோல் ஏப்ரல் 2020 முதல் நிர்வாக இயக்குநராக ஆட்டோமொபைல் பிரிவை வழிநடத்தி வரும் ராஜேஷ் ஜெஜுரிகரின் மாத அடிப்படை சம்பளம்  ரூ.26 லட்சத்திலிருந்து ரூ.48 லட்சமாக உயர்கிறது. 2023 நிதியாண்டில், நிறுவனம் 34 சதவீதம் அதிகரித்து ரூ.1,21,269 கோடி வருவாயையும், அதன் பிறகு ரூ.10,282 கோடி நிகர லாபத்தையும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.