அமெரிக்காவில் இந்திய துணை தூதரத்திற்கு தீவைக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த ஜூலை 2ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீவைப்பு சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய துணை தூதரகத்தின் மீது தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சியில் “ நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகம் அருகே எரிபொருளை ஊற்றி பின்னர் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பின்னர் அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விரைந்து தீ அணைக்கப்பட்டதால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை கடும் கணடனத்தை பதிவு செய்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைப்பு தொடர்பான வீடியோவை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்ற வாசகத்துடன் பரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







