இறந்தும் பலரை உயிர் வாழ வைக்கும் இளைஞர்!!

விபத்தில் மூளை சாவடைந்த இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இறந்தும் அவர் பலரை உயிர் வாழ வைத்துள்ளார். திருவாரூரில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மூன்று மணி நேரத்தில்…

விபத்தில் மூளை சாவடைந்த இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இறந்தும் அவர் பலரை உயிர் வாழ வைத்துள்ளார்.

திருவாரூரில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மூன்று மணி நேரத்தில்
சென்னைக்கு விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. கல்லீரல் உள்ளிட்ட மற்ற உறுப்புகள் நான்கு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஐயப்பன்
என்பவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமமைடந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மூளை சாவடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.


அதன் அடிப்படையில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு 3 மணி நேரத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டது. திருவாரூரில் இருந்து மன்னார்குடி-தஞ்சாவூர் வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பத்து மணிக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரபட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் ஐயப்பனின் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு கண்களும் தானமாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.