இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய இளைஞரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை திறக்க மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா யார்க்ஷயர் நகரம் சென்றனர்.மன்னரது வருகைக்காக நகரின் மிக்லேகேட் பாரில் தற்காலிக வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலிக்குப் பின்னால் நின்று பொதுமக்கள் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலாவை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது கூட்டத்தில் இருந்த 23 வயதான இளைஞர் ஒருவர், “இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது” என்று கத்தியபடி, மன்னர் சார்லஸ் மீது மூன்று முட்டைகளை வீசினார். அதிர்ஷ்டவசமாக அவை அனைத்தும் மன்னர் சார்லஸ் மீது படாமல் கீழே விழுந்து நொருங்கியது. உடனடியாக அங்கு காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.
மன்னர் சார்லஸ் இந்த சம்பவத்தை பெரிதும் பொருட்படுத்தாமல், பாதையில் சிதறிக்கிடந்த முட்டைகளை கண்டு ஒதுங்கிச் சென்று, சுற்றியிருந்த மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்களோடு கலந்துரையாடினார்.
மன்னர் சார்லஸ் இங்கிலாந்து அரசரானது முதலே அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவருக்கு பெரும்பான்மையான மக்களது ஆதரவு கிடைத்துள்ளது ஒருபுறம் என்றாலும், சிலர் அவருக்கு எதிர்ப்புக் குரல் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.