இளைஞர் ஒருவர் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனா்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் பிறந்த நாளை முன்னிட்டு
பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை உடனிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். வலைதளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து, வீடியோ காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த இளைஞர் மதுரை கட்ராபாளையத்தை சேர்ந்த குரு தர்ஷன் என்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதாகவும், வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவேற்றி அதில் பலரது கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்கிறார்கள் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.








