கடற்கரையில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் கடற்கரையில் கடந்த வாரம் கடலில் குளிக்கச் சென்று ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் ஒருவரது உடல் இன்னும் கரை ஒதுங்காத நிலையில் தற்போது ஒரு துயர சம்பவம் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் இன்று 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாறை கற்களின் மீது நடந்து சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்த பொழுது கடல் அலை அவரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கடலில் சிக்கி தத்தளித்த நிலையில் திடீரென காணாமல் போன நிலையில் அருகில் இருந்தவர்கள் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்த போது சுமார் ஒரு மணி நேரம் கழித்து உயிர் எழுந்த நிலையில் இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து அந்த பகுதி மக்கள் எண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . அப்பகுதியில் விசாரித்த போது ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்த இளைஞர் சிறிது நேரம் கழித்து காணாத நிலையில் கரை ஒதுங்கியது என்று தெரிவித்தனர். தனியாக வந்தாரா? இல்லை நண்பர்களுடன் சேர்ந்து வந்து கடலில் குளிக்க வந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.