சென்னை அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழில் இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை அம்பத்தூர், ஞானமூர்த்தி பொதுமக்கள் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாகவே இந்த பிரச்னை நீடிக்கின்றது. ஏரிக்கு செல்லக்கூடிய மழை நீர் தடுக்கப்படுவதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குகின்றது. இதன் காரணமாக 20 தெருக்கள், 1,000 குடும்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன.”
கடந்த 5,6 நாட்களாக எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு வந்து வடிகால் பணியை துரிதப்படுத்தினார். இரவு பகலாக பணி செய்தாலும் மழை நீர் முற்றிலுமாக வடியவில்லை..
https://twitter.com/news7tamil/status/1462309402996719617
மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்து அதனை முறையாக பராமரித்தால் இந்த 30 ஆண்டுக்கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அமையும். கள்ளிகுப்பம், இந்திரா நகர், விஜயலட்சுமிபுரம் மற்றும் மேனாம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இப்பகுதிக்கு வரும் நீரை தடுத்தால் இந்த பிரச்னை முடிவுக்கு வரும்.” என பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளையும் தீர்வுகளையும் முன்வைத்துள்ளனர்.







