கணவருடன் சேர்த்து வைக்க 2 வயது குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்.
மதுரை கூடக்கோயில் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் – சாந்தி தம்பதியினருக்கு ஜோதி என்ற மகளும் ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். தொழிலுக்காக கேரளா வயநாடு பகுதியில் தங்கி மகாலிங்கம் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் தூரத்து சொந்தமான மதுரை பெருங்குடியைச் சேர்ந்த விஜயன் – வேலம்மாள் தம்பதியினரின் மகன் கார்த்திக் என்பவருடன் ஜோதிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆன ஒரு மாதத்தில் ஜோதி கர்ப்பமாகியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், வெளியூரில் வேலை வந்திருப்பதாகக் கூறி ஜோதியின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று வரும் வரை இங்கு இருக்குமாறு கூறி சென்றுள்ளனர். அடுத்த நாள் ஜோதி தன் கணவருக்கு அலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது கார்த்தியின் தாய் போனை எடுத்து நீ யார் எதற்காக போன் செய்கிறாய் என கூறி போனை வைத்துள்ளார். ஜோதி தொடர்ந்து அழைத்ததற்கு போனை எடுத்த கார்த்தி 50 பவுன் வரதட்சணையாக தனது சகோதரிக்கு போட்டுள்ளோம் என கூறியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை; 3 பேர் அதிரடி கைது’
மேலும், உங்கள் வீட்டில் தனக்கும் 25 பவுன் தான் கொடுத்துள்ளீர்கள் என கூறி போனை வைத்துள்ளார். இந்நிலையில், ஜோதியின் கணவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர்கள் வீட்டை காலி செய்து சகோதரியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. எனவே இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜோதியின் கணவர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில். நீண்ட நாட்கள் ஆனதால் மதுரை மாவட்ட ஆட்சியர் இடமும், காவல் ஆணையாளர் இடமும் புகார் கொடுத்துள்ளார்.
இதனை தொடந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜோதி கொடுத்த புகாரின் பேரில் ஜோதியின் கணவர் குடும்பத்தை அழைத்து விசாரணை செய்து திருமணத்தின் போது 25 பவுன் நகையை திரும்பப் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கார்த்திக் தரப்பில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விவாகரத்தை ஏற்காத ஜோதி சேர்ந்து வாழ விரும்புவதாக இன்று வீட்டின் முன்பு 2 வயது குழந்தையுடன் அமர்ந்து ஜோதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்துவருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.