மதுரையில் பட்டதாரி இளைஞர் ஜிம்மில் அதிக பளு தூக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு வயது இருபத்தி ஏழு. இவர் பட்டப்படிப்பு முடித்த நிலையில் கணினி விற்பனை செய்யும் பணி செய்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் தினமும் வீட்டின் அருகே இருக்கக்கூடிய ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். வழக்கம் போல் நேற்றும் உடற்பயிற்சிக்கு சென்றபோது அதிக எடை கொண்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்ட சக நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து எஸ் எஸ் காலனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிக பளு தூக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.








