சென்னையில் இருந்து ஷார்ஜாவிற்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 97 லட்சத்தி 46 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கரன்சிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின் பேரில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஷார்ஜாவிற்கு செல்ல வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த வாசிம் அக்ரம் (வயது 30) என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்த போது கைப்பைகளில் ரகசிய அறைகளில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்து இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா். அதில் கட்டுக்கட்டாக சவூதி ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.
வாசிம் அக்ரமிடமிருந்து ரூ. 97 லட்சத்தி 46 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக வாசிம் அக்ரமை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.