பலாபழம் கிடைக்காத விரக்தியில் மாட்டுத்தொழுவத்தை அடித்து நொறுக்கிய யானை!

தென்காசி அருகே, பலாப்பழம் எட்டாததால் பசியினால் ஆவேசம் அடைந்த ஒற்றைக் காட்டுயானை மாட்டுத்தொழுவினை அடித்து நொறுக்கியுள்ளது. தென்காசி மாவட்டம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அம்பநாடு எஸ்டேட் பகுதி ரப்பர் தோட்டத்தில்,…

தென்காசி அருகே, பலாப்பழம் எட்டாததால் பசியினால் ஆவேசம் அடைந்த ஒற்றைக் காட்டுயானை மாட்டுத்தொழுவினை அடித்து நொறுக்கியுள்ளது.

தென்காசி மாவட்டம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அம்பநாடு
எஸ்டேட் பகுதி ரப்பர் தோட்டத்தில், ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து
வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள இந்த எஸ்டேட் பகுதிக்கு ,
அவ்வப்போது காட்டு யானை கூட்டமாக வந்து அங்குள்ள வீடுகள், விவசாய
நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று
உணவு தேடி சுற்றி திரிந்துள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் சௌந்தரராஜன்
என்பவரது வீட்டில் இருந்த பலா மரத்தை பார்த்த காட்டு யானை, அதில் இருந்த
பலாப்பழத்தை பறித்து சாப்பிட முயற்சி செய்துள்ளது. பலாப்பழம் யானையின்
தும்பிக்கைக்கு எட்டவிலை.பசியின் கொடுமையில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற காட்டு யானை, சவுந்தரராஜனின் மாட்டுத் தொழுவினை அடித்து நொறுக்கி உள்ளது.

இதில் அவரது மாட்டுத்தொழுவம் முழுவதும் சேதம் அடைந்தது. அங்கு இருந்த
மாடுகள் பயத்தில் கயிறை அறுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளது, இந்நிலையில் அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை குடியிருப்பு பகுதியிலிருந்து துரத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.