கல்வி கற்கும் அனைவரும் அறிவுத்திறன் பெறுவதை உறுதி செய்யவேண்டும் -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

அனைவருக்கும் கல்வி என்பதை விட, கல்வி கற்கும் அனைவரும் அறிவுத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.  சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தம்பாக்கம்…

அனைவருக்கும் கல்வி என்பதை விட, கல்வி கற்கும் அனைவரும் அறிவுத்திறனுடன்
இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 15 வது சர்வதேச இயந்திரக்
கருவிகள் கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாட்டை கட்டமைக்கும் சக்திகளுக்கு மத்தியில் இருப்பதில் பெருமை கொள்கிறேன். முந்தய காலத்தைவிட, தற்போதைய காலம் மாறிவிட்டது என்பதை நான் உணர்த்த விரும்புகிறேன்.

ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு நம் கலாச்சாரம் மீண்டு வர காலம் எடுத்துக்கொண்டது. வாஜ்பாய் வந்த பிறகு தான் அந்த பாதை திரும்பியது. தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் எண்ணங்கள் அப்போது தான் தோன்றின.

தொழில்நுட்பஙகளுக்கு ஏற்ப நாம் தகவமைத்துக்கொள்ள அதிக காலம் எடுத்தது. கம்ப்யூட்டர் என்றால் என்னவென்றே நமக்கு தெரியாத போது, பல நாடுகளில் அதை உருவாக்கத் தொடஙகி விட்டார்கள். இந்த தாமதம் நம் வளர்ச்சியை தேக்கப்படுத்தியது. இந்தியர்களின் இந்த தேக்கத்தை மாற்ற 1400 கோடிக்கு திட்டஙகள் தீட்டி,
வெளிநாடுகளுடனான நல்லுறவை பலப்படுத்தி, தொழில்நுட்ப முன்னேற்ற காலத்தின்
தாமதத்தை குறைத்தோம்.

அத்துடன், ஒரு குடிமகனுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகள் கிடைக்காமல் இருந்தது. அது சீராகக் கிடைக்கத் தேவையான திட்டஙகள் 9 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் திட்டங்கள் மாறிக் கொண்டே இருந்ததால் செய்ததையே திரும்ப திரும்ப செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதையெல்லாம் மாற்ற இந்த 9 வருட ஆட்சி உதவியது.

மேலும், நாட்டின் வளர்ச்சியை அரசாங்கம் கையாளாமல், மக்களே வளர்ச்சிக்கும்,
முன்னேற்றத்துக்கும் முயற்சி செய்ய திட்டமிட்டு, புதிய முயற்சிகளுக்கான
அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையை கொடுத்தது. அது நம்மை ஆயிரம் ஸ்டார்ட்-அப் கம்பெனிகளையும்,
நூற்றுக்கும் மேற்பட்ட யுனிகார்ன் கம்பெனிகளையும் உருவாக்க வழிவகுத்துள்ளது.

அரசு பள்ளி மாணவிகள் சேட்டிலைட் உருவாக்குகிறார்கள். நேற்று அவர்களை சந்தித்து
நான் பேசினேன். இரண்டாம் உலகப்போரின்போது எதிரெதிர் கருத்து கொண்ட அமெரிக்கா-ரஷியா இணைந்தது. பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வளரும் போது உலகம் கவலைப்படுகிறது. இந்தியா எழும்போது இந்த உலகம் அதை வரவேற்கிறது

அத்துடன், சுதந்தரம் அடைந்த பின்னர் தொழிற்துறை வளர்ச்சிக்கு பின்பற்றப்பட்ட மாடல்
இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. 90களுக்கு பிறகு பொதுத்துறை
நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டது. அரசு நிர்வகிக்க வேண்டுமே தவிர தொழில்
செய்ய முடியாத அதனால் தான் 90 களுக்கு பின் வந்த வாஜ்பாய் அரசும் புதிய
தொழில்துறை வளர்ச்சி மாடலை பின்பற்றியது. தற்போது கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர்
மோடி தலைமையில் உள்ள அரசு தொழில்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. நமது இலக்கான 100வது சுதந்திர
ஆண்டில் இந்திய உலக நாடுகளுக்கு தலைமை பொறுப்பில் இருக்கும்.


மேலும், 40%க்கும் மேற்பட்ட எரிசக்தி தேவையை இந்தியா கிரீன் எனர்ஜியாக உற்பத்தி
செய்கிறது. இயற்கையை பாதுகாப்பதிலும் இந்திய அரசு முன்னோடியாகவும் இருந்து
வருகிறது. இயற்கை அன்னைக்கு முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதையே யாதும் ஊரே யாரும் கேளீர் என பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாடு அறிவுறுத்தியது.

இந்த பூமியை இந்தியா தான் காப்பாற்றவேண்டும். இந்தியாவால் தான் இந்த பூமியை
காப்பாற்ற முடியும். தமிழ்நாட்டில் மின்சாரம், சாலைகள், மனிதவளம் என சிறந்த உட்கட்டமைப்புகள் உள்ளன. இதனை முன்னேற்றத்துக்கு பயன்படுத்த நாம் திறன்மேம்பாட்டில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கூறினார்.

எல்லோரும் படித்து விட்டார்கள் என்பதைவிட, அவர்கள் எவ்வளவு அறிவுத்திறனுடன்
இருக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். தொழில்துறை பிரிவில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முன்னோடியாக உள்ளது தமிழ்நாட்டில் சாலை வசதி மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதால் தொழில்துறைகள் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி அறிவு உயர் கல்வி படிப்பு தொடர்பு சதவீதமும் அதிகமாக
இருப்பது மட்டுமே போதாது திறன் மேம்பட்டிலும், ஏட்டறிவு மட்டுமில்லாமல்
திறனுடன் கல்வி கற்றலிலும் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.