நடிகர் விஜய் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனையொட்டி தவெகவானது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பிரச்சார குழு மற்றும் தேர்தல் பிரச்சார மாநில சட்டபாதுகாப்பு குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் தவகவிற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.
புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டை போலவே புதுச்சேரியிலும் விஜயின் தவெக கட்சி போட்டியிடுகிறது.
இந்த நிலையில் தற்போது புதுச்சேரியிலும் தவகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.







