வாழ்க்கையை ‘வாழ்’

சென்னையில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கு தன் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அந்த வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டவர்கள் என புரியவைக்கும் படம்தான் ‘வாழ்’ இத்தனை எளிதாக இந்தப்படத்தை கடந்துவிட முடியுமா? இதன்…

சென்னையில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கு தன் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அந்த வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டவர்கள் என புரியவைக்கும் படம்தான் ‘வாழ்’

இத்தனை எளிதாக இந்தப்படத்தை கடந்துவிட முடியுமா? இதன் தாக்கம் ஒரே வரியில் அடங்கக்கூடியதா? கண்டிப்பாக இல்லை.

பொருளாதார மயமாக்கப்பட்ட இந்த சமூகம், நிறுவனமயமாக்கப்பட்ட இந்த வாழ்க்கையில், இயல்பு என கட்டமைக்கப்பட்ட செயல்களை மீறும் ஒரு குழந்தைக்கு கொடுக்கப்படும் “ஃபிங்கர் ஆன் யுவர் லிப்ஸ்” கட்டளை, ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தையை துன்புறுத்தும் கணவரை, கொலை செய்யும் தாயின் செயல் குற்றமே என்றாலும், உணர்ச்சிவசப்பட்டு செய்த செயலுக்கு தன்னையே மாய்த்துக்கொள்ள துடிக்கும் அவரது மனம், நமது எண்ணங்களுக்கு சாட்சி சொல்ல துடிக்கிறது.

இருப்பிடம் மறுக்கப்படும் அகதிகளுக்கு, போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுக்கும் பொலிவிய பெண், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பழந்தமிழர் வாழ்வியல் பற்றிய முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.

அடைக்கப்பட்ட அறையில் வாழ்ந்துவரும் பிரகாஷுக்கு உலகை அறிமுகப்படுத்தி, மனிதர்களை அடையாளப்படுத்தும் எகுவேராவை கொண்டாடாதவர்கள் யாருமில்லை.

பழங்குடியினரை இழிவாக சித்தரிக்கும் இயல்பான சினிமா போக்கை மீறி அவர்களை கண்ணியமாகக் காட்சிப்படுத்தியுள்ள படங்கள் சொற்பம்தான். அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டு தனித்தன்மையோடு நகர்கிறது இந்தப்படம்.

இயற்கை எழில் கொஞ்சும் தீவுகள், அருவிகள் முத்தமிடும் மலைத்தொடர்கள், அன்பு செய்து வாழ்வை அழகாக்கும் மனிதர்கள் என படம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது அழகியல்.

நாளக்கி… அது நாளக்கி… என்ற மையக்கருத்தோடு பயணங்களை, அது தரும் அனுபவங்களை, அதிலிருந்து கிடைக்கும் ஆறுதல்களை நமக்குக் கடத்தியிருக்கும் அருண் பிரபு புருஷோத்தமனின் “வாழ்” படைப்பு என்றென்றைக்குமானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.