ராமநாதபுரம் | நொடியில் நடந்த விபரீதம்… பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 56). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 10ம் தேதி அப்பகுதியில் உள்ள கோயிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் கலந்துக்கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். அப்போது அவர்  எதிர்பாராதவிதமாக பூக்குழியில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : கர்ப்பமாக இருப்பதாக 9 மாதங்களாக ஏமாற்றிய பெண்… கடைசியில் போட்ட பக்கா பிளான்… போலீசாரிடம் சிக்கியது எப்படி?

உடனடியாக அருகில் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேசவன், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூக்குழி இறங்கிபோது தீயில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் எற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.