நாட்டு நாட்டு பாடலின் இசைக்கு ஏற்றவாறு டெஸ்லா காரின் விளக்குகளை ஒளிர செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு பல்வேறு விருதுகள் குவிந்து வந்தன. அந்தவகையில் கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்த பாடல் பெற்றதையடுத்து ஆஸ்கர் விருதுக்கு இந்த பாடல் நாமினேஷன் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு சட்டப்பேரவை; இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்
கடந்த வாரம் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து. இதையடுத்து நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் டிரெண்டிகில் இருந்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் திரைபலங்கள், அதிகாரிகள் என பலரும் இந்த பாடலில் வருவது போன்று நடனமாடி வருகின்றனர்.
.@Teslalightshows light sync with the beats of #Oscar Winning Song #NaatuNaatu in New Jersey 🤩😍
Thanks for all the love. #RRRMovie @Tesla @elonmusk pic.twitter.com/wCJIY4sTyr
— RRR Movie (@RRRMovie) March 20, 2023
அந்த வகையில் மிகவும் பிரபல கார் நிறுவனமான டெஸ்டா நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், டெஸ்லா கார்கள் அனைத்தும் நாட்டு நாட்டு பாடலின் இசைக்கு ஏற்றவாறு ஒளிர செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்