பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு – 100க்கும் மேற்பட்டோர் பலி!

தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம்…

தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலச்சரிவு இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  சமீபத்தில் பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும், அது ரிக்டர் அளவில் 5.1 ஆக  பதிவானதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.