ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிரதமர் கிஷிடா

ஜப்பான் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), வகயாமா என்ற நகரில் பொதுவெளியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடிகுண்டு…

ஜப்பான் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), வகயாமா என்ற நகரில் பொதுவெளியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்தது போன்ற பெருத்த ஒலி எழுந்தது. தொடர்ந்து அந்த இடம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் சிதறியோடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த குண்டுவெடிப்பில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமரை பாதுகாப்பு படையினர் அந்த இடத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றினர். ஜப்பான் பிரதமரை நோக்கி பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள் : என்ன ஒரு புத்திசாலித்தனம்….. வியக்க வைக்கும் உணவகத்தின் பெயர்!

இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். அந்த நபரை போலீசார் தரையில் கீழே தள்ளி மடக்கிப் பிடிக்கும் வீடியோவை அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, பொதுவெளியில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.