சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேர முடியாத கவலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை எடப்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் திருவண்ணாமலை அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில், இந்தாண்டு கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பித்திருந்தார். இவர்கள் பன்னியாண்டி என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எஸ்சி சான்றிதழ் பெற மாணவி முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அரசு தரப்பில் மாணவிக்கு சான்றிதழ் தர இயலாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னோடு பயின்ற மாணவிகள் அனைவரும் சேர்ந்து தான் கல்லுாரியில் சேர முடியவில்லை என்ற மன வருத்தத்தில் அந்த மாணவி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
அனகா காளமேகன்






