” பீகாரிலிருந்து எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாட்னாவில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை…

பாட்னாவில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் இன்று நடைபெறுகிறது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், உத்தவ் தாக்கரே, சரத்பவார், உமர் அப்துல்லா மற்றும் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பீகார் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அம்மாநில தலைநகர் பாட்னாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

” பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் தமிழ் சங்கத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்றேன். ஆசியாவின் ஒளி புத்தர், ஜன்நாயக் கர்பூரி தாக்கூர் மற்றும் பி.பி. மண்டல் போன்றோரை நமக்கு வழங்கிய மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் போர் முழக்கம் எழுப்புவதில் ஆச்சரியமில்லை. மூத்த தலைவர் லாலுபிரசாத யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இன்று வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு தயாராகி  வருகிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.