முக்கியச் செய்திகள் மழை இந்தியா தமிழகம்

வருகிறது புயல் – செய்ய வேண்டியவை என்னென்ன?

புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், கடற்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாதவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு செல்லலாம். முக்கியமான பத்திரங்கள் , சான்றிதழ்கள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவசர தேவைக்கு டார்ச்லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். வானிலை பற்றிய தகவல்களை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கேட்டறிந்து கொள்ள வேண்டும் – வதந்திகளை நம்பக் கூடாது. பாதுகாப்பற்ற நிலையிலும் இடியும் நிலையிலும் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகக் கூடாது.

ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களின் அருகில் பொதுமக்கள் செல்லக் கூடாது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லக் கூடாது – தேவையற்ற பயணங்களையும் தவிர்க்க வேண்டும்.

மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்க வேண்டும் – படகு இயந்திரங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். புயல் ஓய்ந்து விட்டது என கருதி வெளியே வரக் கூடாது – எதிர் திசை காற்றுஅடித்து ஓய்ந்த பிறகே வெளியே வர வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

பால், ரொட்டி மற்றும் உணவுப் பொருட்களை போதுமான அளவில் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அறுந்து விழுந்த நிலையில் மற்றும் தொங்கும் நிலையில் உள்ள மின் கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Web Editor

வியாட்நாம் பிரதமர் என்குயென் ஸுவானுடன் 21 ஆம் தேதி பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Saravana

அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!

Web Editor