இருசக்கர வாகனத்திற்குள் ஒளிந்து கொண்டு 2 மணி நேரம் ஆட்டம் காட்டிய பாம்பு!

ஓசூரில் இருசக்கர வாகனத்திற்குள் சிறிய பாம்பு ஒன்று புகுந்து ஒளிந்து கொண்டு பல மணி நேரம் ஆட்டம் காட்டிய நிலையில் இறுதியாக தீயணைப்புத் துறையினர் உதவியுடன் லாவகமாக மீட்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

ஓசூரில் இருசக்கர வாகனத்திற்குள் சிறிய பாம்பு ஒன்று புகுந்து ஒளிந்து கொண்டு பல மணி நேரம் ஆட்டம் காட்டிய நிலையில் இறுதியாக தீயணைப்புத் துறையினர் உதவியுடன் லாவகமாக மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் வழக்கம் போல தனது பணி நிமித்தமாக வெளியில் சென்று விட்டு மீண்டும் அலுவலகம் நோக்கி வந்து தனது இருசக்கர வாகனத்தில் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வாகனத்தில் இருந்து சிறிய பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அச்சமடைந்த அவர் இருசக்கர வாகனத்தை
ஓட்டிக்கொண்டு மூக்கொண்ட பள்ளியில் உள்ள மெக்கானிக் கடைக்கு வந்தார்.  இதுகுறித்து தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து மெக்கானிக் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி
நேரத்திற்கு மேலாக அந்த வாகனத்திற்குள் புகுந்திருந்த பாம்பை கண்டுபிடிக்க
முடியாமல் திணறினார். ஒரு கட்டத்தில் இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்கள்
ஏறக்குறைய முழுவதுமாக கழற்றி தேடப்பட்ட நிலையில் இறுதியில் வாகனத்திற்கு கீழே
உள்ள பகுதியில் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பாம்பை
தீயணைப்பு மீட்பு துறையினர் லாவகமாக மீட்டு பிளாஸ்டிக்பாட்டிலில் அடைத்து
காட்டுப் பகுதிக்குள் விடுவதற்காக எடுத்து சென்றனர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இருசக்கர வாகனத்திற்குள் ஒளிந்து கொண்டு ஆட்டம்
காட்டிய சிறிய பாம்பை மீட்ட நிகழ்வு அந்தப் பகுதி வழியாக சென்றவர்களை
ஆர்வத்துடன் பார்க்க வைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.