மதுரையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மதுரை புதுநத்தம் சாலையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,3.56 ஏக்கர் பரப்பளவில், 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடியில் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. 7 தளங்கள், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உலக தரத்தில் கட்டப்பட்டுள்ளது. .
சுமார் 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த நூலகத்தில் முதல் கட்டமாக 3 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து தளங்களுக்கும் மக்கள் எளிதாக சென்றடையும் வகையில் நகரும் படிக்கட்டுகள், லிப்டு வசிதி உள்ளது. கள் உள்ளன.
இந்த நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் பங்கேற்கிறார். நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் சென்னையிலிருந்து காலை 10 மணிக்கு விமானம் மூலம் மதுரை செல்கிறார்.காலை 11.20 மணிக்கு மதுரையை அடையும் அவர், அங்கிருந்து கார் மூலம் சென்று புதுநத்தம் பகுதியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், மாலை 5 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.






