காவலர்களை அலறவிட்ட ஒற்றை காட்டு யானை..!

கோத்தகிரி அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவலர்களை ஒரு மணி நேரம் யானை முடக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாதமாக ஆண்…

கோத்தகிரி அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவலர்களை ஒரு மணி நேரம் யானை முடக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாதமாக ஆண் யானை ஒன்று உலா வருகிறது. இந்த யானை சில நேரங்களில் வாகனங்களை தாக்குவதும், சாலையில் வாகனங்கள் செல்ல விடாமல் தடுப்பதும் போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் அவ்வப்போது ஈடுபட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று , காவலர்கள் தங்கி உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே முகாமிட்டது.

இதனால், அச்சமடைந்த காவலர்கள் சோதனை சாவடி கட்டடத்திற்குளேயே முடங்கினர். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து எந்த இடையூறு செய்யாமல் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. ஒரு மணி நேரம் சோதனை சாவடி கட்டிடத்திற்குள் காவலர்களை சிறை வைத்த அந்த ஆண் காட்டு யானையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.