ஈரோடு அருகே அடசபாளையம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வனப்பகுதியிலிருந்து வழி மாறி வந்த ஒற்றை ஆண் யானை தஞ்சமடைந்துள்ளது.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த டி.என்.பாளையம் வனப்பகுதியிலிருந்து வழி தவறி ஒற்றை ஆண் யானை ஒன்று அத்தாணி செம்புலிசாம்பாளையம், சஞ்சீவிராயன் கோவில் வழியாக வரப்பள்ளம் அருகே உள்ள பவானி ஆற்றின் அருகே தஞ்சம் அடைந்தது. அப்பகுதி மக்கள் டி.என். பாளையம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த அந்தியூர் மற்றும் டி.என். பாளையம் வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் யானையை காணக்கூட்டம் கூட்டமாக மக்கள் வந்ததால் வர்பள்ளம் வழியாக விவசாய பூமிக்குள் இடம் பெயர்ந்தது. தற்போது அடசபாளையம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் யானை தஞ்சம் அடைந்துள்ளது. மேலும் அரசம்பாளையம் கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்தனர்.
மேலும் பங்களாபுதுார் காவல் நிலையம் சார்பில் யானை இருக்கும் இடத்தில் மக்கள் கூடாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
—–அனகா காளமேகன்







