குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை… பயணிகள் அச்சம்!

குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை கொம்பன் யானை ஒன்று முகாமிட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையின் இருபுறங்களை சுற்றியும் வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில்…

குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை கொம்பன் யானை ஒன்று முகாமிட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையின் இருபுறங்களை சுற்றியும் வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால், சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் பலாப்பழங்களை உட்கொள்ள இங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று குன்னூர் மரப்பாலம் பகுதியில் ஒற்றைக் கொம்பன் யானை ஒன்று
முகாமிட்டது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பயணிகள் வாகனத்தை அச்சத்துடன் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் பலர் அந்த யானையுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

எனவே இந்த ஒற்றை காட்டு யானையை கண்காணிக்க வனத்துறை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.