குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை!

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக மலைப்பாதையில் பசுமை திரும்பி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து சாலையில் ஒற்றை யானை முகமிட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து…

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக மலைப்பாதையில் பசுமை திரும்பி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து சாலையில் ஒற்றை யானை முகமிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் கோரை புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. எனவே யானைகள் சமவெளி பகுதியில் இருந்து கோரை புற்களை மேய்வதற்காக மலைப்பாதைக்கு வரும் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் ஒற்றை யானை உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். சாலையில் முகாம் இட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து விரட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனைதொடர்ந்து வனத்துறையினர் அந்த ஒற்றை யானையை கண்காணித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.