திருத்துறைப்பூண்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவி வகித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 950 மாணவ மாணவிகள் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இன்று சர்வதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமையாசிரியர் தங்கராசு சர்ப்ரைஸாக தொடர்ந்து விடுப்பு எடுக்காமலும் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி மற்றும் சக மாணவ மாணவியர்களிடம் பழகு மனப்பான்மை பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை போன்றவற்றில் திகழ்ந்து வரும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியதர்ஷினி ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவி வகிப்பார் என அறிவித்தார்.
இதனையடுத்து பள்ளி மாணவர்கள் அனைவரும் கைத்தட்டி வரவேற்று பாராட்டினர். தொடர்ந்து தேசிய கொடி ஏற்றி வைத்த மாணவி பிரியதர்ஷினிக்கு தலைமையாசிரியர் சால்வை அணிவித்து இருக்கையில் அமர வைத்தார். இதனையடுத்து ஆசிரியர்கள் மற்றும் சக பள்ளி மாணவிகள் அவரை வாழ்த்தி பாராட்டி கேக் வெட்டி மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கொண்டாடினர்.
இதுகுறித்து ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவி வகித்து வரும் பிரியதர்ஷினி
கூறுகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு என்னை ஒருநாள் தலைமை ஆசிரியராக பதவி வகித்து இருக்கையில் அமர வைத்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .








