பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதி அம்மன் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவின் துவக்கமாக கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது. உலாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 25ம் தேதி தர்மராஜா திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 11 அடி அகலம் 60 அடி நீளத்திற்கு குண்டம் அமைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை துவங்கியது. குண்டத்தின் முன்பாக கோவில் பூசாரிகள் பூஜைகள் செய்யப்பட்டு முதலில் குண்டத்தில் பூ பந்தை உருட்டி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.