முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆ.ராசா சர்ச்சை பேச்சு – நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு

திமுக எம்பி.ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நீலகிரி மற்றும் அன்னூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி எம்.பி. ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, நீலகிரி தொகுதி முழுவதும் இன்று இந்து முன்னணி சார்பில் ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில், ஆட்டோக்கள், மினி பஸ்கள், டூரிஸ்ட் வாகனங்கள் இயங்கின. இறைச்சி, பூ மற்றும் பழக்கடைகள் பெரும்பாலும் திறந்திருந்தன. திமுக நிர்வாகிகள் வியாபாரிகளை நேரில் சந்தித்து கடைகளை திறக்கச் சொல்லி வந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒருசில கடைகள் திறக்கப்பட்டன.

இதேபோல, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடையடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், வியாபாரிகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க கூடாது என கடை கடையாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் கடைகளை திறக்க பாதுகாப்பு அளிக்க கோரி அன்னூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதற்கு போட்டியாக இந்து அமைப்புகள் சார்பில் கடைகளை மூடுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அமைப்புகளைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆங்கிலேயரை விரட்டியடித்த பூலித்தேவன் – முதல்வர் ஸ்டாலின்

Web Editor

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

Arivazhagan Chinnasamy

தமிழ்நாடு அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை’ சிறந்த திட்டம்- மத்திய அமைச்சர்

G SaravanaKumar