முக்கியச் செய்திகள் சினிமா

ஏ.ஆர். ரகுமானுடன் போட்டியிடும் ஏ.ஆர். ரகுமான்

மூன்று தமிழ் படங்கள் அடுத்தடுத்து 15 நாட்கள் இடைவெளியில் வெளிவருவதால் ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தற்போது தமிழ், மலையாளம், இந்தி எனப் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் இசையமைத்த மூன்று தமிழ் படங்கள் அடுத்தடுத்து 15 நாட்கள் இடைவெளியில் வெளிவருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த மூன்று படங்களும் தமிழ்த் திரை ரசிகர்களால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளிவரவுள்ளன. ஏற்கனவே இப்படங்களிலிருந்து வெளின பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவை என்னென்ன படங்கள்  ? அவை எப்போது வெளியாகிறது ? என்ற தகவல்கள் பற்றிக் காண்போம்.

1) டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது.

2) கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தின் மூலம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ” அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களைத் தொடர்ந்து, கவுதம் மேனன் மற்றும் சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான ‘சித்தி இடனானி’ தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். மேலும் சிம்புக்கு அம்மாவாக ‘ராதிகா நடித்துள்ளார்.
இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ” அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் இசைப்புயல்“ஏ. ஆர். ரகுமானே இசையமைக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன்மூலம் இசையில் தன்னுடைய படங்களையே மோத விடுகிறார் ஏ.ஆர்.ரகுமான்.

3) மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீலகிரி, கோவையில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

Web Editor

92 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

G SaravanaKumar

மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!

Web Editor