சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைப்பகுதியான இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டத் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் சீச்சுவான் பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. நில சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர். நிலநடுக்கத்திற்கு பின்னர் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டு உள்ளன.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். பலர் பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு ஓடி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்நிலநடுக்கம் 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து செங்டுவிலிருந்து தென்மேற்கே சுமார் 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள யான் நகரை சில நிமிடங்களுக்குப் பிறகு 4.2 ரிக்டர் அளவில் ஒரு அதிர்வு உணரப்பட்டுள்ளது.







